எட்டு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி..!

0
125

இலங்கை தமிழ் சிறுமி ஒருவர் எட்டு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்து உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி இந்த வார இறுதியில் நடந்த ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த எட்டு வயதான தமிழ் சிறுமியான போதனா – சிவானந்தன் (Bodhana Sivanandan) சிறந்த பெண் வீராங்கனையாக முடி சூட்டப்பட்டார்.

அதாவது வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா இறுதிச் சுற்றில் இரண்டு முறை ரோமானிய சாம்பியனான 54 வயதான கிராண்ட்மாஸ்டர் விளாடிஸ்லாவ் நெவெட்னிச்சியுடன் டிரா செய்தார்.

சர்வதேச மாஸ்டர் மற்றும் இங்கிலாந்து மகளிர் பயிற்சியாளர் லோரின் டி’கோஸ்டாவை தோற்கடித்தார்.ஒரு போட்டி விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்கும் இளைய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

எட்டு வயது சிறுமி “வியக்கத்தக்க முடிவை” அடைந்ததாக ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. போதனாவின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here