அன்றைய எதிர்கட்சியினராக இருந்தபோது தற்போதைய ஆளும் கட்சியினர் 2017 ஆம் ஆண்டில் வெனிசுலாவில் பிரச்சினை உக்கிரமடைந்த வேளையில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றிவளைத்தனை நினைவுகூர்ந்த சாமர சம்பத் தசநாயக்க எம்.பி, இன்று ஆளும் கட்சியிலிருக்கும்போது அதுகுறித்து மௌனம் சாதிப்படு வேடிக்கையானதென சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று (6) உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர் “வெனிசுலா பிரச்சினை 2017 ஆம் ஆண்டில் பெரிதான போது இன்றைய ஆளும் கட்சியினர் அன்று அமெரிக்க தூதரகத்தை சுற்றிவளைத்தனர். நேற்றைய தினம் இவர்களின் மற்றுமொரு குழு அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று சுற்றிவளைக்க முற்பட்டது.
ஆனால் ஆளும் கட்சியினர் ஒன்றும் செய்யவில்லை. இவர்கள் எதிர்கட்சியிலிருக்கும் போது “சண்டி” ஆளும் கட்சியில் இருக்கும் போது “நொண்டி” என்றுதான் கூற வேண்டும்.
எதிர்கட்சியிலிருக்கும்போது சுற்றிவளைப்புக்குச் சென்றவர்கள் ஆளும் கட்சியிலிருக்கும்போது அமைதி காக்கிறார்கள். வெனிசுலாவை அடித்துவிட்டர்கள் என்றோ அந்நாட்டு ஜனாதிபதியை இன்றரை மணித்தியாலங்களில் நாடு கடத்தினார்கள் என்றோ எதனையும் ஆளும் கட்சியினர் பொருட்படுத்தவில்லை.” என்றார்.




