எதிர்காலத்தில் புல் மற்றும் புண்ணாக்கே இலங்கை மக்களுக்கு – கொட்டகலையில் போராட்டம்

0
225

நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தில் மலையக மக்களும் இணைந்துக் கொண்டுள்ளனர்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தின் கே.ஓ பிரிவு தோட்ட தொழிலாளர்களும் ‘ப்ரோடெக்ட்’ சங்கத்தின் பெண்கள் அமைப்பும் இணைந்து கொட்டகலை ரொசிட்டா நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (06.05.2022) ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பதாதைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தி கோஷம் எழுப்பி அரசிற்கான தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக எதிர்காலத்தில் புல் மற்றும் புண்ணாக்கினை தமது உணவாக எடுக்கும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தனர்.

நேற்று நாடாளுமன்றித்தில் நடாத்தப்பட்ட பிரதி சபாநாயகர் தெரிவின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சார்பாக இருந்தமை கண்டிக்கதக்கது எல்லோரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர் என்று தெரிவித்தனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here