நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையின் போது பாதிப்புக்குள்ளான
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புத்தக பைகள் மற்றும் காலணிகள் எதிர்கால மலையகம் அமைப்பின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.மத்திய கிழக்கில் பணிப்புரியும் பணியாளர்களின் பங்களிப்போடு இப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.எதிர்கால மலையக அமைப்பின் தலைவர் கிருஷ்டியின் வேண்டுகோளிற்கு அமைய இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஹட்டன் கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் ஜோர்ஜ் உட்பட பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் எதிர்கால மலையகம் அமைப்பின் அங்கத்தவர்கள் பலரும் கலந்துக்கொண்டு இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்