எதிர்வரும் நாட்களில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாய் வரை அதிகரிக்க கூடும்

0
169

நாட்டில் நிலவும் உர நெருக்கடிக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாய் வரை அதிகரிக்க கூடும் என செய்தி வெளியாகியுள்ளது.பொலநறுவை மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய அரசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா, அடுத்த மாத இறுதியில் இலங்கைக்குள் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்பட கூடும்.

அரிசிக்கு நீண்ட வரிசை ஏற்பட கூடும். விவசாயிகளுக்கு நெல் ஒரு கிலோ கிராமிற்கு 75 ரூபாய் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் இந்த பணத்தை வழங்குவார்கள் என நான் நினைக்கவில்லை. தற்போது வரையில் தனியார் பிரிவிடம் 95 ரூபாயில் நெல் ஒரு கிலோ கிராம் கொள்வனவு செய்யப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு கிலோ கிராம் அரிசி 300 ரூபாய் வரை செல்லும்.

இதேவேளை, உரிய நேரத்தில் இரசாயன உரங்கள் கிடைக்காததால் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வருவதாக விவசாயிகள் தொடர்ந்து முறைப்பாடு செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here