சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, றிஷாத் பதியுதீன், விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் குழு கூடியது.
உலக சந்தையில் அமுலில் உள்ள விலைக்கு அமைவாக உள்ளூர் சந்தையிலும் சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.
இதற்கு அமைவாகவே சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க வாழ்க்கை செலவினக் குழு தீர்மானித்ததாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில நாட்களில் நுகர்வோர் அதிகார சபை சமையல் எரிவாயுவின் விலையை அறிவிக்கவுள்ளது.