எந்த பொறிமுறையில் கம்பனிகளுடன் பேரம் பேசுவது என்பதை திகாம்பரம் விளக்குவாரா? கனகராஜ் கேள்வி!

0
257

தோட்டத் தொழிலாளா களின் சம்பள உயர்வு தொடா;பாக கடந்த நான்கு மாதங்களாக
பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சம்பளத்தை வழங்கவேண்டிய
பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கப்பாட்டுக்கு வராமைக்கு கூட்டு ஒப்பந்தம்
தான் காரணமா? என்பதை அமைச்சா; திகாம்பரம் தெளிவுப்படுத்த
வேண்டும் என இலங்கை தொழிலாளா; காங்கிரசின் உப தலைவா; கணபதி கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியோpனால் மட்டுமே தான் அரசாங்கத்துடன்
பேசி அல்லது எல்லோரும் சேர்ந்து போராடி சம்பளத்தை பெற முடியும் என்ற
நிலைப்பாட்டை அமைச்சா திகாம்பரம் தெளிவுபடுத்தியுள்ளார் வேலைநிறுத்தம்
ஆரம்பித்தப்போது நிலையான அரசாங்கமொன்று இல்லாததனால் வேலைநிறுத்தப்
போராட்டத்திற்கு தம்மால் ஆதரவு தரமுடியாதென்றும் தமது நிலையான அரசாங்கம்
வந்தவுடன் நியாயமான சம்பளத்தை பெற்றுத்தருவதாகவூம் தெரிவித்த
அமைச்சா தற்போது முன்னுக்கு பின் முரணான கருத்தை வெளிப்படுத்துகிறார்
கூட்டு ஒப்பந்த்ததை காரணங்காட்டி சம்பள விடயத்தில் நழுவல் போக்கை
கையாளுவதாகவே அவரின் கருத்து அமைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக
தோட்டத் தொழிலாளகளின் சம்பள உயர்வை கோரி பல்வேறு போராட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டன. அமைச்சா திகாம்பரம் தலவாக்கலையில் பெருந்தோட்ட
கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆர்ப்பாட்டம் செய்தபோதும் இந்த கூட்டு
ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது ,கடந்த பொது தோ;தலின்போது தலவாக்கலையில்
நடைபெற்ற பொது கூட்டத்தில் தற்போதைய பிரதமா ரணில் விக்கிரமசிங்க தோட்டத்
தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதாக கூறிய
போதும் இந்த கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது.

பெருந்தோட்ட தொழிலாளா;களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்த
முறையை கைவிடுவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் அதிக விருப்பம கொண்டுள்ளன.
அது அவர்களின் தொழிலாளர் விரோத நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு கையாளும்
உபாயமாகும். ஆனால் அமைச்சா திகாம்பரத்தின் அணியினரும் அவ்வாறான
நிலைப்பாட்டில் இருக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் மலையகத்தில் புதிதாக
அரசியல் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளவா;களும் இதைத்தான் கூறுகின்றனா,
அதாவது கூட்டு ஒப்பந்தம் பலருக்கு அரசியல் பேசுவதற்கான மேடையாகியூள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமானையும்
அவமானப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு கூட்டு ஒப்பந்தத்தை
ஒரு சிறந்த விளம்பர ஊடகமாக மாறியூள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை விட தோட்டத் தொழிலாளா;களுக்கு ஊதிய உயர்வை
பெற்றுக்கொடுக்கும் சிறந்த முறை ஒன்றை எவராவது முன்வைத்தால் அதையும்
பரிசீலனை செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.
அதற்காக பழைய சம்பள நிர்ணய சபை முறையை தூசு தட்டுவதால் அது கூட்டு
ஒப்பந்த முறையைவிட மோசமான நிலைக்கு தொழிலாளா;களை கொண்டுசென்றுவிடும்.
பெருந்தோட்ட கம்பனிகளும் கூட்டு ஒப்பந்த பொறியிலிருந்து தப்பிச்செல்லவே
முணைப்பு காட்டுகின்றன. தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் எதை
நினைக்கின்றனவோ அதையே அமைச்சா; திகாம்பரமும் நடைமுறைப்படுத்த முனைகிறார்.

இலங்கை தொழிலாளா; காங்கிரசிற்கு இந்த கூட்டு ஒப்பந்த்திலிருந்து
வெளியேறுவதற்கு சில மணிநேரம் போதுமானது, சேறுபூசுவதையும்
அவமானங்களையூம் தாங்கிக்கொண்டு தோட்டத்தொழிலாளருக்காக இந்த கூட்டு
ஒப்பந்த்தில் அங்கம் வகிக்கின்றோம் அவ்வாறு இதிலிருந்து வெளியேற
வேண்டுமானால் கூட்டு ஒப்பந்த்திற்கு மாற்றீடான ஏற்றுக்கொள்ளக்கூடிய
பொறிமுறை ஒன்று இருக்க வேண்டும். அமைச்சா; திகாம்பரத்திடம் அவ்வாறான
பொறிமுறை இருக்குமானால் அதை அவர் பகிரங்கப்படுத்த முன்வரவேண்டும்.

இம்முறை சம்பள உயர்விற்காக பல்வேறு வகையிலான அழுத்தங்கள்
பிரயோகிக்கப்பட்டன. தோட்டத்தொழிலாளா;கள் வீதிக்கு இறங்கி போராடினா;.
காலிமுகத்திடலில்
பல்லாயிரக்கணக்கான இளைஞா;கள் ஒன்று கூடி சம்பள உயர்வை வலியுறுத்தினார்
நாட்டின் வடக்கு கிழக்கு உறவுகளும் தோட்டத் தொழிலாளருக்காக குரல்
கொடுத்தனா; அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களும் எம்மோடு இணைந்து கொண்டனா;இ
வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக எமது இளைஞா;கள் கோட்டை ரயில்
நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதமிருந்தனா; இத்தனைக்கும் பெருந்தோட்ட
கம்பனிகள் செவிசாய்க்காதபோது அமைச்சா திகாம்பரம் சொல்வது போல கூட்டு
ஒப்பந்தத்தில் இருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால் பெருந்தோட்ட
கம்பனிகளிடமிருந்து சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடியூமென்றால் அது
எப்படி என்பதை அமைச்சா அதை தெளிவுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here