எனக்கு ஏதாவது நடந்தால் அந்த நாட்டையே அழித்துவிடுங்கள் – டிரம்ப் கடும் ஆவேசம்!

0
73

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தலைமைத்துவ விமர்சனங்கள் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னதாக ஈரானில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டக்காரர்களை அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை கடுமையாக கண்டித்த அமெரிக்கா, போராட்டக்காரர்களுக்கு தண்டனை நிறைவேற்றினால் அந்த நாடு மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

மேலும் ஈரானில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் அரசுக்கு முடிவு கட்ட டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரத்தில் டிரம்புக்கு ஈரான் கடுமையாக பதிலடி கொடுத்தது. இதன்படி, ‘எங்கள் தலைவரை நோக்கி ஆக்கிரமிப்புக் கை நீட்டினால், நாங்கள் அந்தக் கையை வெட்டுவது மட்டுமல்லாமல், அவர்களின் உலகத்திற்கும் தீ வைப்போம் என்பது டிரம்புக்கு தெரியும்’ என ஈரான் ஆயுதப்படைகளின் செய்தி தொடர்பாளர் அபல்பசல் செகராச்சி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஈரானின் இந்த அதிரடி பதிலடிக்கு டிரம்ப் கடுமையாக எதிர் வினையாற்றி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘எனக்கு மிகவும் உறுதியான வழிமுறைகள் உள்ளன. எனக்கு ஏதாவது நேரிட்டால், ஈரான் என்ற நாடே இந்த பூமியில் இல்லாதவாறு அவர்கள் (அமெரிக்க படைகள்) துடைத்து எறிவார்கள்’ எனக்கூறினார். முன்னதாக, தனக்கு ஏதாவது நடந்தால், அதன் பின்னணியில் ஈரான் இருப்பது தெரிந்தால், அந்த நாட்டையே அழித்துவிடுமாறு அவர் தனது ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here