எனது பொக்கட்டுக்குள் சென்ற பணம் தற்போது அநுர திஸாநாயக்கவின் பொக்கட்டுக்கு செல்கிறது”

0
35

தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் தனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக அன்று எதிர்கட்சியில் இருந்த தேசிய மக்கள் சக்தி கூறியது அனைத்தும் பொய் என்பதை கடந்த எரிபொருள் விலை திருத்தம் நிரூபிப்பதாக முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அன்று எரிபொருள் பணம் தனது சட்டைப் பைக்குள் சென்றால், இன்று அதே பணம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அநுர திஸாநாயக்கவின் சட்டைப் பைக்குள்ளும் சென்றிருக்க வேண்டும் என்றார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விற்பனை தொடர்பான உண்மையைப் புரிந்து கொண்டதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய குழுக்களால் விமர்சிக்கப்பட்ட விடயங்களில் உண்மையும் பொய்யும் தற்போது மக்களுக்கு தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here