உரக் கூட்டுத்தாபனத்தில் 2015 ஆம் ஆண்டு நிதி முறைகேடு செய்ததாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) வழக்குத் தொடர உள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அமைச்சர் மற்றும் மேலும் இருவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தை வழங்கிய டெண்டர் சபையின் தலைவராக ஜெயக்கொடி பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.