எரிபொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிப்பு.

0
168

மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலையகத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்திய போதிலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாம் விரக்தியடைந்துள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டிகளை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மலையக தோட்டப்பகுதிகள் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த பலர் எரிபொருளை பெற்றுக் கொள்ளாமல் திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டது.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here