எரிபொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

0
157

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருள் வகைகளும் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் சில்லறை விலை குறைந்தபட்சம் 125 ரூபாவினால் குறைக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை விலையை லீட்டர் ஒன்றுக்கு 110 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி எரிபொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்த குறிப்பிடத்தக்களவு 100 ரூபாவிற்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் மின்சாரக் கட்டணங்களையும் நியாயமான அளவில் குறைக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த மாதம் 9 பில்லியன் ரூபா லாபமீட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விலைகளை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய நியமங்களை பின்பற்றி எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டால் நாட்டு மக்களுக்கு மேலும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் என ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here