இலங்கையை வந்தடைந்துள்ள சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமாக இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களில் இருந்து எரிபொருள் தரையிறக்கும் பணிகள் இந்த வார இறுதிக்குள் முன்னெடுக்கப்படாத நிலையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் வரிசை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி சிங்கள் ஊடகமொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை அதிகாரிகள் தொடர்ந்து விநியோகித்து வரும் நிலையில், சில தினங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலா 37 ஆயிரம் மெற்றிக் டொன்னுக்கும் அதிகளவான டீசல் மற்றும் பெற்றோல் அடங்கிய குறித்த இரு கப்பல்களும் கடந்த பல நாட்களாக கொழும்பு கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.