கொழும்பிலிருந்து கொட்டகலை பகுதிக்கு எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பிரதேச சபைக்கு முன்னாள் உள்ள ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் நேற்று (13) திகதி மாலை சுமார் 4 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்துக்காரணமாக பொது போக்குவரத்து சில மணித்தியாலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறித்த பவுசரிலிருந்து பாரிய அளவில் எரிபொருள் கசிவும் ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் எண்ணெயினை சேகரி;த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் குடைசாய்ந்த பவுசரினை அகற்றி பொது போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த எரிபொருள் பவுசர் வங்கி பக்கமாக குடைசாயந்துள்ளதனால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்