டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (25) நவரெலியா பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
இதனால் தூரப் பிரதேஙக்ளுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். “அப்பி பாரே, கோட்டா கெதரே” என கோஷங்களும் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிலையங்களில் உரிய முறையில் தமக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமக்கு எரிப்பொருள் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழங்கப்பட வேண்டும் என பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சாரதிகளும், நடத்துனர்களும் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சாந்திபுர, மிபிலியான, ஹாவா எலிய, பொரலாந்த, ராகல, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய இடங்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நுவரெலிய தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
(க.கிஷாந்தன்)