டீசல் திருட்டு தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்யப்படுவதாக இயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் இரயில் நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 5 பணியாளர்களை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு இரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரயில் நிலையத்தில் 545 லீற்றர் டீசல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி குறித்த டீசல் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இரயில்வே பொது முகாமையாளரால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழு சமர்ப்பித்த அறிக்கையினை கருத்திற்கொண்டு அநுராதபுரம் இரயில் நிலையத்தின் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி உட்பட ஐவரை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டீசல் திருட்டு தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படுவதாக இயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.