எரிபொருள் நிறப்பு நிலையத்திலிருந்து வெளியேரும் எண்ணை கசிவினால் குடிநீர் மாசடைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குயில்வத்தை பகுதியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது
வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
கொழும்பு அட்டன் பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கருகிலே 03.09.2017 காலை 11 மணியளவில் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்து.
குறித்த எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு கீழ் பகுதியில் வசிக்கும் சுமார் 25 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் எரிபொருள் நிறப்பு நிவையத்தில் கசியும் எண்ணை நீரில் கலப்பதனால் பாதிப்டைந்துள்ளதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்
தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் வட்டவலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து முறைபாடு தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தையடுத்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்