தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தை நிறைவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
எரிபொருள் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அத்துடன் எரிபொருளை தொடர்ந்து தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
எரிபொருள் அடங்கிய கப்பல்களுக்கான டொலர்களை விடுவிப்பதற்கு இதன்போது இணக்கம் வெளியிடப்பட்டது.
இலங்கை மின்சார சபையினால் கனியவள கூட்டுதாபனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 80 பில்லியன் ரூபா கடனை நிதியமைச்சு செலுத்துவதற்கு இணங்கியுள்ளதாகவும், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.