எரிபொருள் விலை 20 சதவீதம் உயரும்

0
172

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும். தொலைபேசிகள், சோலார் பேனல்கள், Pickme மற்றும் Uber போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக இந்த நாட்டில் எரிபொருளின் விலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் இந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (காற்று/சோலார்) மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டாலும், சோலார் பேனல் ஒன்றின் விலை இரண்டு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். வரும் ஜனவரி முதல் 18 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு நழுவப் போவதாகவும், அடுத்த ஆண்டும் அதிக விலை கொண்ட எரிபொருள், நிலக்கரி போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோலார் பேனல்களின் விலையை குறைப்பதே செய்ய வேண்டும், ஆனால் இதுவரை இல்லாத VAT காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் முடங்கும் என்றும் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here