எரிபொருள் விலை 200 ரூபாவினால் அதிகரிப்பு?

0
159

எரிபொருளின் விலையை எதிர்வரும் 24 ஆம் திகதி 200 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்..

நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தொடரும் நெருக்கடி காரணமாக ஜூலை முதல் வாரத்திற்குள் நாட்டை முழுமையாக மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் இந்தியாவின் தலையீடு தீவிரமாகியுள்ளமையினால், மன்னாரில் உள்ள நான்கு எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவிற்கும், கச்சத்தீவுக்கும் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.

மேலும், நாடு இவ்வளவு நெருக்கடியில் இருக்கும் நிலையில், தற்போது அமைச்சராக இருக்கும் ராஜபக்சவின் மகன் ஒருவர் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளார், என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித குற்றம் சுமத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here