எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க தீர்மானம்

0
205

தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், எரிவாயு விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, சீமெந்து, இரும்பு, வயர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பல உள்நாட்டு உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளது.

அந்த விலைகள் குறித்து ஆராய்வதற்காக, அவற்றின் விலைச் சூத்திரம் குறித்து, நுகர்வோர் அதிகார சபையில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு அமைய, அவற்றின் கட்டுப்பாட்டு விலைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here