எருமை மாடுகள் விவசாய காணிகளை நாசம் செய்வதால் நுவரெலியா பிரதேச செயலாளர் திருமதி. சுஜீவா போதிமான்ன அவர்களின் தலைமையில் நுவரெலியாபிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின்போது
இக்குற்றச்சாட்டை முன்வைத்து அந்த எறுமைகளை பிடித்து அவைகளை வளர்க்க வசதியுள்ளவர்களுக்கு கையளிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்தோடு நுவரெலியா பிரதேச செயலகத்தில் விவசாய கூட்டத்தின்போது எறுமைகளின் தொல்லை விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விவசாய கூட்டத்தின்போது எறுமைகளை
பிடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அந்த எறுமைகளை பிடித்து கட்டிவைத்திய நிலையில் வனவள பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும அவைகளை விடுவித்து சம்பந்தபட்ட அரசாங்க அதிகாரிகளை கடுமையாக சாடி பிடித்து வைத்திருந்த
அனைத்து எறுமைகளையும் விடுவித்துள்ளார்.
அமைச்சர் பாலித தெவரப்பெருமையை கண்டித்து அம்பேவெல பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் அம்பேவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது மத்திய மாகாண முன்னால் விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸரூபவ் நுவரெலியா பிரதேச சபை உப தலைவர் கே.பீ.வீ. சரத் குமார மற்றும் அரச அதிகாரிகள்
உட்பட பலர் கலந்துகொண்டனர்.
டீ. சந்ரு , எஸ்.சதிஸ்