எலிக் காய்ச்சலினால் மாணவன் ஒருவர் பலி!

0
165

இலங்கையில் கொரோனாவின் தாக்கம் வீரியமடைந்து வரும் நிலையில், தற்போது எலிக் காய்ச்சலும் அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது.

நேற்றுமுன்தினமும் (12), மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் வைத்திய அதிகாரி தனபால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிமலை 60ஆம் பிரிவு ஜயமினிகம பிரதேசத்தைச் சேர்ந்த உதிமலை மகா வித்தியாலயம், 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த டப்ள்யூ. எம். முத்திக்க லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எலிக் காய்ச்சல் ஏற்பட்டு 14 நாட்கள் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here