இலங்கையில் ஒரு கிலோக்கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தைகளில் ஒரு எலுமிச்சை பழம் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.எலுமிச்சை பழத்தின் விலை இவ்வாறு உயர்வடைந்துள்ள நிலையில் வல்லாரை கீரையின் விலையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு வெள்ளவத்தையில் சரியான விலை நிர்ணயிக்கப்படாமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.




