எலெக்ட்ரிக் வாகனங்களை கொள்வனவு செய்ய புதிய சலுகைகள்!

0
6

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்களின் விற்பனையை படிப்படியாக நிறுத்த பிரித்தானிய அரசாங்கம் முயற்சிக்கும் நிலையில்,
எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) மக்கள் அதிகம் வாங்குவதற்கு ஊக்கமளிக்கும் புதிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை அறிவிப்பதாக போக்குவரத்து செயலாளர்
ஹெய்டி அலெக்சாண்டர் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் செலவுகளை ஈடுசெய்ய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியங்கள் மற்றும் £700 (பவுண்டு) மில்லியன் ($948 மில்லியன்) வரை நிதியுதவி வழங்கப்படும் என டெலிகிராஃப் மற்றும் டைம்ஸில் வந்த செய்திகள் தொடர்பில் அவர் எந்த தகவல்களையும் அறிவிக்கவில்லை.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புவோருக்கு குறைவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் போக்குவரத்து பகுதிகளில் சார்ஜிங் வசதிகளை உருவாக்க 63 மில்லியன் பவுண்டு முதலீடு செய்யப்படவுள்ளதாக அலெக்சாண்டரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here