எல்ல பகுதி சுற்றுலா விடுதி ஒன்று முற்றாக தீக்கிரையானது!

0
1

எல்ல, கந்தேகும்புர பகுதியில் கட்டுமான பணி முன்னெடுக்கப்பட்டு வந்த சுற்றுலா விடுதி ஒன்று தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி, முழு இடத்தையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பண்டாரவளை தீயணைப்புத் துறை வீரர்கள், பொலிஸார் மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here