இன்று காலை கைதுசெய்யப்பட்ட எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்து பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.