எஸ்.ஆனந்தகுமார் விருது வழங்கி கௌரவிப்பு

0
113

சிறந்த சமூக சேவை மற்றும் மனிதவுரிமைச் செயல்பாடுகளுக்காக எஸ்.ஆனந்தகுமாருக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சிறந்த சமூக சேவை, சமூக அபிவிருத்தி மற்றும் மனிதவுரிமைச் செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் FAZLI RUMI CENTER அமைப்பு இவருக்கு இச்சான்றிதழை வழங்கி கௌரவித்தது.

UNICEF, ISO SKY, AFRICAN DIASPORA, AMERICAN INSTTUTE OF EXTENDED STUDIES உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அனுசரணையுடன் இந்த சான்றிதழ் ஸ்.ஆனந்தகுமாருக்கு வழங்கபட்டுள்ளது.

எஸ்.ஆனந்தகுமார், ஐ.தே.கவின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டிருந்ததுடன், நீண்டகாலமாக சமூகச் சேவைகள் மற்றும் மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

கொவிட் தொற்று ஆரம்பமான காலம்முதல் தமது சொந்த நிதியின் ஊடாக பொது மக்களுக்கு இவர் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வருகிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here