நுவரெலியா பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இவ்வாரத்தின் திங்கட்கிழமை நுவரெலியா பிரதேசபை தலைவர் வேலு யோகராஜின் தலைமையில் இடம்பெற்றது.
பலரின் எதிப்பார்ப்புக்கு மத்தியில் நுவரெலியா பிரதேச சபை கூடியது.பெரும் பிரச்சனைக்குள்ளாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது வரவுசெலவுதிட்டத்தை முன்வைத்ததும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் எவ்விதடையுமின்றி சபையில் 23 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவளித்து வாக்களித்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்ததோடு ஒருவர் சபைக்கு சமூகம் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து சபையில் நுவரெலியா பிரதேசபை தலைவர் வேலு யோகராஜ் உரையாற்றும் போது இச்சபை அனைத்து சபைத்தலைவர்களாலும் ஒன்றுப்பட்டது.எனவே அனைத்து உறுப்பினர்களினதும் வேண்டுகோளிற்கிணங்கவும் அபிவிருத்தி பணிகளிற்கிணங்கவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் எவ்வித கட்சிப்பாகுபாடின்றியும் நுவரெலியா பிரதேச சபையினால் நிதி ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தகவல்:நீலமேகம் பிரசாந்த்