இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறிவருகிறது 2000 சம்பளம் கொடுத்தால் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் என்று ஆனால் ஏமாற்று அரசியலை செய்த எந்த ஒரு மலையக கட்சியினையும் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.என்பதே உண்மை அவர்கள் ஜனாதிபதி தோழர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊழல் கோவைகள் இருப்பதாக கூறிவருகிறார் அதே நேரம் மலையக கட்சிகள் காலம் காலமாக இந்த மக்களை ஏமாற்று அரசியலை செய்து அடிமைகளாகவே ஆக்கியுள்ளது இந்நிலையில் அவர்கள் எப்படி இவர்களை சேர்த்துக்கொள்;வார்கள் அவர்கள் ஆதாரவு தேவையென்றால் எங்களை சேர்த்துக்கொள்வார்கள் ஒரு போதும் மக்களை ஏமாற்றி பொழப்பு நடத்திய கட்சிகளை சேர்த்து கொள்ளமாட்டார்கள் என ஐக்கிய சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் நேற்ற இரவு 4 ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
அவர் அங்;கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என தெரிந்து மக்கள் மத்தியில் போலியான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது எங்கள் கட்சியில் உள்ள ஒருவரை ஏதோ ஒரு சலுகையினை வழங்கிவிட்டு அவரை தாங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு ஐக்கிய சுதந்திர கட்சியின் முழு ஆதரவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸூக்கு வழங்குவதாக தெரிவித்து வருகிறது நாங்கள் மக்களை காலம் காலமாக ஏமாற்றி அரசியல் செய்த எந்த ஒரு கட்சிக்கும் ஆதவு வழங்க போவதில்லை மக்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள் இளைஞர்களும் ஒரு போதும் இந்த இந்த அரசியல் கலாசாரத்திற்கு துணை போகப்போவதில்லை ஆகவே தான் அவர்கள் புத்தி பேதலித்து இவ்வாறு என்ன செய்வது என்று தெரியாமல் போலி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இவர்கள் உண்மையாக மக்களுக்கு சேவையாற்றியிருந்தால் ஏன் போலி பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றால் எதற்கு இவர்கள் பயப்பட வேண்டும் இவர்களுக்கே தெரியும் அவர்கள் வரமாட்டார்கள் என்று எனவே தான் மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறார்கள்.
இன்று ஒருவரை எடுத்து கொண்டு விட்டோம் என்பதற்காக வேறு எவரும் அந்த கட்சிக்கு ஆதரவு வழங்க போவதில்லை அவர் என்ன பிரதம வேட்பாளரா இங்கு பிரதம வேட்பாளர் நான் தான் இம்முறை தோட்டத்தில் பிறந்து தோட்டத்தில் வாழும் எங்களை மக்கள் நன்கு புரிந்து கொண்டு உள்ளாரகள் மலையகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் மலையகத்தில் பிறந்து வளர்ந்து படித்த இளைஞர்களால் முடியும் என்பது எனவே நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் இம் முறை இரண்டு ஆசனங்களை பெற்று அரசாங்கத்திற்கு ஆதர தேவைப்பட்டால் நாங்கள் பெற்றுக்கொடுப்போம் மலையகத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஒரு புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவோம்.என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இதே வேளை ஐக்கிய சுதந்திர கட்சியின் தவிசாளர் ஜே.கே. அவர்களும் கருத்து கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய சுதந்திர கட்சி சம்நிலம் என்ற கட்சியோடு கூட்டமைப்பு அமைத்து தபால் உறையிலே போட்டியிடுகிறோம் எங்களுடைய வெற்றியை கண்டு தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் வென்று விடுவார்கள் என்று நினைத்து சதிதீட்டுகொண்டு இருக்கிறது இ.தொ.கா. உங்கள் அரசியல் இதுவா?
நீங்கள் அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள் முதுகில் குத்துவதற்கு தான் அனுபவம் தேவை அரசியல் செய்வதற்கு அனுபவம் தேவையில்லை என்று ஆனால் அரசி குத்துவதென்றாலும் அனுபவம் ஒன்று இருக்க வேண்டும்.நாங்கள் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறோம் மக்களை இது வரை ஏமாற்றியது போதும்.இனியும் மக்கள் ஏமாறுவதற்கு ஒரு காலமும் இடமில்லை.இப்போ இளைஞர்கள் தீர்மானித்திருக்கிறார்கள் புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று இது வரை எங்களை அடிமைபடுத்தியது போதும்.
ஒரு வேட்பாளர் மாத்திரம் சுய லாபத்திற்காக தாவியிருக்கிறார் இன்னொரு கட்சிக்கு ஐக்கிய சுதந்திர கட்சி இ.தொ.காவுக்கு ஆதரவு என்று பொய்யான பிரசாரம் செய்தது தவறான காரியம்.மக்களுக்கு சரியானதையும் உண்மையானதையும் செய்திருந்தால் மக்கள் உங்களை அங்கிகரிப்பார்கள் உங்கள் பொய் மக்கள் 85 வருடம் கேட்டிருக்கலாம் இனி அவர்கள் உங்கள் பொய்களை கேட்க தயாரில்லை.எங்களை வைத்து பிரசாரம் செய்ய வேண்டாம் பிரதான கட்சி என்று சொல்லும் போது தெரிகிறது வெற்றி எங்கள் பக்கம் என்று ஆகவே தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளின் கரம் பாராளுமன்றத்திலே உயரும் நீங்கள் அநேக நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள் தோட்டத்தொழிலாளகளின் பிரச்சினையை தோட்ட தொழிலாளரிடம் தான் கேட்க வேண்டும் என்று அது உண்மை அதனால் தோட்டத்தொழிலாளர்கள் எல்லாரும் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.எங்கள் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் நாங்கள் 200 வருட காலமாக லயத்தில் தான் வாழ்கிறோம்.
இன்று லயத்தில் உள்ளோம் உங்களுக்கு ஒரு நாள் லயத்தில் வாழ முடியுமா? ஆகவே விதைத்தவன் உறங்கி விடலாம் விதைகள் உறங்கப்போவதில்லை மாறிவரும் மலையகத்தை மாற்றப்போகும் புது யுகம் இது என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்