ஏழு அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று உணவு தேடி சென்ற போதுஅட்டன் ஸ்டெதன் பகுதியில் ரயிலில் அகப்பட்டு துண்டு துண்டாக சிதைந்த நிலையில் பலியானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் 04.05.2018. வெள்ளிகிழமை காலை அட்டனில் இருந்து கண்டி பகுதியை நோக்கி பயணித்த புகையிரத தண்டவாளத்தில் அட்டன் ரொசல்ல இடைப்பட்ட ஸ்டெதன் பகுதியில் இந்த மலைபாம்பின் உடலம் இனங்கானபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை புகையிரத வீதியின் திருத்த பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களினால் இந்த மலைமாம்பின் உடலம் இனங்கானபட்டு அட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டுள்தாகவும் இது தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மலையகத்தில் இதுவே பாரிய மலைபாம்பு எனவும் வட்டவலை வனபகுதியில் இது போன்ற மலைபாம்புகள் காணபடுவதாகவும் வனவிலங்கு காரியால அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதீஸ், மு.இராமச்சந்திரன்