ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் கோரிக்கையை நோர்வூட் பிரதேசசபை ஏற்று கொள்ளாததால் ஐ.தே.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு!!

0
211

நோர்வூட் பிரதேசசபையின் நிதிமற்றும் கொள்கைகள் திட்டமிடல் தொடர்பாக நோர்வூட் பிரதேசசபையில் அங்கம் வைக்கின்ற ஜக்கிய தேசிய கட்சியின்
உறுப்பினர்களும் இதில் உள்வாங்கபட வேண்டும் என்ற கோரிக்கையை சபை
அமர்வின் போது ஏற்று கொள்ளபடாதால் சபை அமர்வின் போது ஐக்கிய தேசிய
கட்சியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் ஏழு பேரும் வெளிநடப்பு
செய்தள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நோர்வூட் சபை உறுப்பினர்
பாலகிருஸ்னண் சிவநேசன் தெரிவித்தார்

14.11.201 8புதன் கிழமை இடம் பெற்ற சபையின் மாதாந்த அமர்வின் போது இந்த
கோரிக்கை முன்வைக்கபட்ட போதே இவர்கள் வெளிநடப்பு செய்தனர் இதேவேலை
சபையினால் முன்வைக்கபட்ட வரவு செலவு திட்டத்தினை ஏற்று கொள்ள முடியாது
எனவும் சபை அமர்வின் போது வரவு செலவு திட்ட அறிக்கை பத்துநிமிடங்கள்
மாத்திரம் வாசிக்கபட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நோர்வூட் பிரதேசசபை
உறுப்பினர் குற்றம் சுமத்தினர். இதேவேலை சபையின் தவிசாளருடைய வாகனத்திற்கு
எரிபொருளின் செலவிற்காக மக்களுடைய அதிகமான பணம் வீண்விரயம்
செய்யபடுவதாகவும் இவர்கள் இன்றைய அமர்வின் போது வாதங்களை முன்வைத்தனர்

இதேவேலை நிதி மற்றும் கொள்கைகள் திட்டமிடல் என்வற்றுக்கு வாக்கெடுப்பு
ஒன்றினை நடத்த போவதாக கூறி நோர்வூட் பிரதேசசபையின் உதவி தவிசாளர் ஐக்கிய
தேசிய கட்சியினை சார்ந்த ஏழு உறுப்பினர்களும் சபை அமர்வில் இருந்து
வெளிநடப்பு செய்த பிறகே சபையினுள் வாக்களிப்பு ஒன்றை முன்னெடுத்ததாகவும்
இவர்கள் மேலும் தெரிவித்தனர்

இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பிரதேசசபையின் உதவி தவிசாளர் தட்சானா
மூர்த்தி கிஸோகுமாரிடம் வினவிய போது நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர்
கே.கே.ரவிகுழந்தைவேல் அவர்கள் விடுமுறை காரணமாக வெளியில் சென்றுள்ளமையால்
உதவி தவிசாளர் என்ற அடிப்படையில் எனது தலைமையில் சபையின் அமர்வு இடம்
பெற்றது கடந்த கால அறிக்கைகளும் நிதிமற்றும் கொள்கைள் திட்டமிடல்
அறிக்கைகளும் சமர்பிக்கபட்டது.

இதில் கடந்த கால அறிக்கைகள் சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்று கொள்ளபட்டது இதில் நிதி மற்றும் கொள்கைகள் திட்டமிடல் தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் உள்வாங்கபட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்ட போது சபையில் நாங்கள் ஒரு
வாக்கெடுப்பினை முன்னெடுத்த போது இதில் இலங்கை தொழிலாளர் காங்ரசின்
உறுப்பினர்களே வெற்றிபெற்றதாகவும் இதில் அதிகபட்ச வாக்குகளை இலங்கை
தொழிலாளர் காங்ரஸின் உறுப்பினர்கள் பதிவு செய்து இருந்ததாகவும் ஐக்கிய
தேசிய கட்சியில் ஒரு உறுப்பினர் மாத்திரம் தமது வாக்கினை பதிவு செய்ததோடு
ஏனையோர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவர் குறிப்பிடார்

 

(பொகவநதலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here