ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாது!

0
107

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாது என்று அக்கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. இதனை நாமும் ஏற்கின்றோம். இணைவு என்பது இரு தரப்புகளும் ஒரு கட்சியின்கீழ் சங்கமிப்பதா அல்லது கூட்டணியா என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லை.

ஒருமித்த கருத்துடைய இரு தரப்புகளின் ஒற்றுமையென்பது மிக முக்கியம். பிரிந்திருந்ததால்தான் ஜனாதிபதி தேர்தலில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியில் கீழ்மட்ட அரசியல் இயந்திரம் வலுவிழந்துள்ளது. அக்கட்சி ஆதரவாளர்களில் 99 சதவீதம்பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன்தான் இருக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க எமது அரசியல் குரு. அவரை கைது செய்யப்பட்டபோது நாம் கவலை அடைந்தோம். அதற்கு எதிராக குரல் கொடுத்தோம்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாது. இணைவு பற்றி பேசப்பட்டுவருகின்றது.” – எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here