ஷுப்மன் கில் 826 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம் 824 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
ஐசிசி தரவரிசையில் விராட் கோலி, ரோஹித் சர்மா முன்னேற்றம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இதில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 3 சதங்களுடன் 765 ஓட்டங்கள் குவித்த இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி 791 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ஷுப்மன் கில் 826 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம் 824 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓர் இடம் முன்னேறி 4ஆவது இடத்தை அடைந்துள்ளார். உலகக் கிண்ண தொடரில் ரோஹித் சர்மா 597 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதம் விளாசி ஆட்ட நாயகன் விருது வென்ற அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 28 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் 2 இடங்கள் பின்தங்கி 5ஆவது இடத்தில் உள்ளார்.
உலகக் கிண்ண தொடரில் 552 ஓட்டங்கள் குவித்த நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் 5 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தை அடைந்துள்ளார்.பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதலிடத்தில் தொடர்கிறார்.
அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 4 இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.இந்தியாவின் முகமது சிராஜ் 3ஆவது இடத்திலும், ஜஸ்பிரீத் பும்ரா 4ஆவது இடத்திலும் தொடர்கின்றனர். குல்தீப் யாதவ் ஒரு இடத்தை இழந்து 6ஆவது இடத்தில் உள்ளார்