ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் தள்ளிவைப்பு! இன்றும் போட்டி நடைபெறாவிட்டால் இந்த அணி தான் சாம்பியன்

0
142

ஒருவேளை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும்.
ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின.இதில் இறுதிப்போட்டிக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நுழைந்தது.

நேற்று இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில் தொடர்ந்து மழை கொட்டியதால் போட்டி நடைபெறவில்லை.

இதையடுத்து போட்டியானது இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே ட்விட்டரில், ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெறும் என நம்புகிறேன்.

ஒருவேளை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும்.

அதுவும் முடியாவிட்டால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here