இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் பின்னர் தரவரிசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்த்தான் அணி கலந்து கொண்ட 08 போட்டிகளில் 05 போட்டிகள் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது முதலிடத்தில் இடத்தில் உள்ளது.
எனினும், சென்னை அணி கலந்து கொண்ட 08 போட்டிகளில் 05 போட்டிகள் வெற்றி பெற்ற போதும் தரவரிசை பட்டியலில் பிரகாரம் நான்காம் இடத்தில் உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.