கடந்த 24 மணிநேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவின் அருகே எரிமலை ஒன்று வெடித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும், அப்பகுதி முழுவதும் புகைமண்டலாக மாறியிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
நாட்டின் தென்பகுதியில் பரவலாக உணரப்பட்ட நிலநடுக்கங்களில் பல 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாகவே எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரெய்காவிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த எரிமலை வெடிப்பானது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மூன்றாவது எரிமலை வெடிப்பாகும்.
ஐஸ்லாந்தில் தற்போது 33 எரிமலைகள் செயலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சராசரியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றது.
தெற்கு ஐஸ்லாந்தில் கடந்த 1783 ஆம் ஆண்டு இடம்பெற்ற எரிமலை வெடிப்பு ஐஸ்லாந்து வரலாற்றில் பெரும் பாதிப்பை ஏற்பத்திய மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும்.