ஒக்டோபர் 1ஆம் திகதி நாடு திறக்கப்படுமா??

0
169

ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டதைப் போல் இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நாடு திறக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாககியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்​​​​கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ளார். அதனால், கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணியின் நேற்றைய (24) கூட்டம் நடைபெறவில்லை.

எனினும், ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறப்பதற்கு தேவையான கட்டுப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கடந்த கூட்டத்தின் போது, விடயதானத்துக்குப் பொறுப்பானவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணித்திருந்தார்.

கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடி ஆராய்ந்து முடிவெடிக்கும். எனினும், ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், ஒக்டோபர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், பிறிதொருநாளில் அச்செயலணி கூடி
முடிவெடுக்கக்கூடும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே​வேளை, நாடு, தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த ராகம வைத்திய பீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை
முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைப்பது 25 சதவீதத்தில் மட்டுப்படுத்தப்பட வேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச்செல்வது 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை முழுமையாக தடைசெய்ய முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டை முழுமையாக திறக்க வேண்டுமாயின் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் செயற்றிட்டம் 70-80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும்.

நாட்டை முடக்கியிருந்த இந்தக் காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை திருப்தியடையும் வகையில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here