கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிறிஸ்லஸ்பார்ம் தோட்டத்தின் தொழிற்சாலை மூடப்பட்டமைக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்தொழிலாளர்கள் பணிபகீஸ்கரிப்பில் ஈடுட்டுள்ளனர்.
கடந்த ஒருவருடமாக மூடப்பட்டு கிடந்த கிறிஸ்லஸ்பார்ம் தோட்டத்தொழிற்சாலையை மீள திறக்கக்கோரி தோட்டத்தொழிலாளர்கள் பணிபகீஸ்கரிப்பின் ஊடாகவும் வேலைநிறுத்த போராட்டத்தின் ஊடாகவும் தொடர் அழுத்தங்களை கொடுத்து வந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் பணிபகீஸ்கரிப்பை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல் தலைமையிலான குழு குறித்த தோட்டத்திற்கு சென்று தோட்ட முகாமையாளருடன் கலந்துறையாடி இதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் தோட்டத்தொழிற்சாலை இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இன்னும் 25 நாட்களில் அவற்றை உரிய முறையில் பொறுத்தி மீண்டும் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தோட்ட. முகாமையாளர் சில்வா கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.
இக்கலந்துறையாடலில் இ.தொ.கா உபத்தலைவரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல்,கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த் மற்றும் மாநில இயக்குனர்கள், பிராந்திய இயக்குனர்கள் தோட்ட முகாமையாளர்,தோட்ட துரை உட்பட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்