ஒருவர் பல முறை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு

0
158

ஒருவர் பல முறை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இருந்தால் உனடியாக அதனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரினார்.

அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களையும் உரிய வகையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை, இதுவரை நான்காம் தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பான எந்தவொரு சுற்று நிருபமோ, அறிவுறுத்தல்களோ வெளியிடப்படவில்லை, என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here