இம் முறை இடம்பெறுகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தினை பெறவேண்டுமானால் அனைவரும் ஒரே குரலாக நின்று இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய கரங்களை பலபடுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காஙரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
பொகவந்தலாவ இலங்கை தொழிலாளர் காங்கிரசின் காரியாலயத்தில் 03.06.2018.ஞாயிற்றுகிழமை இடம் பெற்ற அங்கத்தவர்கள் தொடர்பான தோட்டதலைவர் மற்றும் தலைவிகளை சந்தித்து உறையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் உட்பட நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதிரவிகுழந்தைவேல், முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ்.அருள்சாமி,நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்களான மடசாமிசரோஜா,பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த பொதுதேர்தலின் போது நாங்கள் பெற்றுகொண்ட வாக்கு 60,000ஆயிரம் ஆனால் இம்முறை இடம் பெற்ற பிரதேசசபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் பெற்ற வாக்குகல் 160,000ஆயிரம் வாக்குகளை பெற்றுஇருக்கிறோம் இந்த இரண்டு வருடங்களில் எங்களின் கொள்கைகலையும்,நடவடிக்கைகலையும் செயற்பாடுகலையும் மக்கள் ஆதரித்து இருக்கிறார்கல் இப்போது உள்ளவர்கலை ஒப்பிட்டுபார்த்தால் இ.தொ.கா.தான் சிறந்தது என மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அந்த எதிர்பார்;ப்பினை நாங்கள் ஈடுசெய்யவேணடும் விரைவில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சிவார்த்தை இருக்கிறது இந்த சம்பள பிரச்சினை பேச்சிவார்த்தை ஆரம்பித்துவிட்டால் சில கட்சிகாரர்கல் வாய்திறக்க ஆரம்பித்துவிடுவார்கல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்த சமுகத்தின் அடையாளம், இ.தொ.கா.என்பது சமுகத்தின் பிரதிநிதி, காலத்துக்க காலம் வந்துவிட்டு போகின்ற அரசியல்வாதிகளோ, காலத்துக்கு காலம் தொழிற்சங்கம் நடத்திவிட்டு ஒய்வெடுக்கின்ற அரசியல் சக்தியோ அல்ல 75வருடத்திற்கு மேலாக மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு சேவைசெய்த ஒரு அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
தோட்ட கம்பெனிகள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுக்கு போகும்போது அவர்களை தயார்படுத்தி கொள்வதற்காக பல்வேறு ஆவணங்களை சமர்பிக்கின்றனர் தோட்டங்கள் காடாகி காணப்படுகிறது என நாங்கள் கூறினால் அவர்கள் புகைப்படங்களை காட்டி நாங்கள் தேயிலை மலைகலை கடாக்கவில்லையென கூறுகிறார்கல் ஆகையால் தான் நாங்கள் கம்பெனிக்காரர்களுக்கு சரியான ஆவணங்களை சமர்பிக்கபட வேண்டும் தோட்டங்கள் காடாக்கபடுகிறது,தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கபடுகிறது,குறிப்பிட்ட தேயிலை கொழுந்திற்கு ஒரு கிலோதேயிலை கொழுந்து குறைவாக பறித்தால் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகல் வழங்கபடுவதில்லை அடாவடிதனம் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதால் அடுத்தவாரத்தில் ஒவ்வொரு தோட்டபகுதிகளுக்கும் சென்று தொழிலாளர்களுக்கு இழைக்கபடுகின்ற அநிதிகலை நாங்கள் பதிவு செய்து அதனை தொழில் தினைக்களததில் இடம் பெறுகின்ற கலந்துரையாடலில் கொழும்பில் வைத்து கம்பணிகாரர்கலை அழைத்து இது போன்ற அட்டூழியங்கள் எல்லாம் தோட்டங்களிலேயே நடைபெறுகிறது என வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு நிலமை கானபடுகிறது.
தோட்டங்களிலே தொழிலாளர்களுக்கு அநிதி இழைக்கபடுமாக இருந்தால் தோட்டங்கல் காடாக்கபடுமாக இருந்தால்,குளவிகொட்டு,சிறுத்தைபுலி தொல்லை போன்ற விடயங்களிலே கம்பணிகள் பாராமுகமாக இருந்தால் வீடமைப்பு திட்டங்களிலே பாராபட்சம் காட்டபடுமாக இருந்தால் அத்தனை விடயங்களையும் இ.தொ.கா.வின் காரியாலயங்கள் ஊடாகவோ,அல்லது தொகுவாரியாக தெரிவுசெய்யபட்டிருக்கின்ற பிரதேசசபை உறுப்பினர்களின் ஊடாகவோ எங்களுக்கு அறிவித்து அந்த தோட்டபகுதிகளுக்கு நேரடியாக செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம், என குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர்,எஸ்.சதீஸ்)