ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்கு சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மியன்மாரின் ஷான் மாநிலத்திலுள்ள கோகாங் பிராந்தியந்தில் குறித்த குடும்பமானது, மோசடி மையங்களை இயக்கி வந்துள்ளது.
அதாவது, மியன்மாரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அடிமைகளாக்கி இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி பல கோடி ரூபாய் மோசடிகளில் இக் குடும்பம் ஈடுபட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதக் குழுக்களைப் பராமரித்தல், கொலைச் சம்பவங்களில் ஈடுபடுதல், வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி சீனா மற்றும் ஏனைய நாட்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று மோசடி மையங்களில் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், இலக்குகளை அடையாத ஊழியர்களைச் சித்திரவதை செய்தல், சிறை வைத்தல் மற்றும் முதலீட்டு மோசடிகள் மூலம் சீனாவுக்குள் பாரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
மியன்மார் இராணுவ அரசாங்கத்துக்கு சீனா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இக் குடும்ப உறுப்பினர்கள் சீனாவுக்கு கடத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர்.
சீன நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், வழங்கப்பட்ட தீர்ப்பில், இக் குடும்பத்தின் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




