நாட்டின் பல பகுதிகளில் நேற்று (05) இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துக்களில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
கலன்பிந்தனுவெவ, நால்ல, தொம்பே, பூகொட, கிளிநொச்சி, இங்கிரிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ் விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, கலன்பிந்துனுவெவ கெகிராவ – கலன்பிந்துனுவெவ வீதியில் யகல்ல பகுதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியில் கவிழ்ந்ததில் வாகனத்தை செலுத்தினவரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நால்ல பொலிஸ் பிரிவில் கொழும்பு – குருநாகல் வீதியில் டொனல்வத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொம்பே பொலிஸ் பிரிவன் ஹங்வெல்ல – கிரிந்திவெல வீதியில் பானகல வெதமெதுர சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து முன்னால் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து கிளிநொக்கி பொலிஸ் பிரிவின் ஏ-09 வீதியில் பழைய கச்சேரி அருகில் சென்ற கெப் பண்டியொன்று வீதியை கடந்த பாசாரி மீது மோதியது. இதில் பாதசாரி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய பொலிஸ் பிரிவின் பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய வைத்தியசாலைக்கு முன்னால் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியுள்ளது.
இதில் 82 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.