ஒற்றை தலைவலி நீங்க எளிய வழிகள் என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி ஒன்றைத்தலைவலி (Migraine) ஏற்படுவது வழக்கம். இது நரம்பியல் தொடர்பான ஒரு நோய். மூளையில் ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே ஒற்றை தலைவலி ஆகும்.
ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்குகிறது. இது சாதாரண மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை சீர்குலைக்கிறது.
குறிப்பிட்ட மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஒற்றைத் தலைவலி மற்றும் அதன் தீவிரத்தை குறைக்கலாம்.
ஒற்றை தலைவலி எதனால் வருகிறது, ஒற்றை தலைவலி காரணம் என்ன?
பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் (ottrai thalaivaliku karananal) அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது.
அத்துடன் பெண்களில் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றங்களும் ஒற்றை தலைவலி ஏற்பட காரணம் என கருதப்படுகிறது.
தலைவலி பிரச்னைக்கும் மன ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது. இதை சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மைக்ரேனுக்கும் bipolar disorder எனப்படும் இரு துருவ மனச்சோர்வுக்கும் ஆழமான தொடர்புகள் இருப்பதை 2016ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
மைக்ரேன் (Migraine) உள்ளவர்களுக்கு பதட்டம் சார்ந்த மன நல பிரச்னை வருவதற்கு இரண்டரை மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.மன அழுத்த பிரச்னை இருப்பவர்களுக்கு மைக்ரேன் வாய்ப்புகள் மும்மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மைக்ரேனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆறு பேரிலும் ஒருவருக்கு வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்திலாவது தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளனர்.
ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்கும். ஆண்களுக்கு 25 – 55 வயதில் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். பெண்களுக்கு இன்னும் சற்று முன்பே ஆரம்பித்துவிட வாய்ப்பு உண்டு.
மன அழுத்தம், மது அருந்துவது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் இந்தத் தலைவலி அதிகமாகிறது. ஒரு சிலருக்குப் பரம்பரையாகத் தலைவலி இருந்தாலும் வரும்.
புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் நம்பப்படுகின்றது.
மாதத்துக்கு ஒருமுறை முதல் ஐந்து முறைக்கு மேலும் வரலாம். தலையின் ஒருபக்கம் உள்ளே லேசாகத் துடிக்க ஆரம்பிக்கும். இது தொடர்ந்தும் இருக்கலாம். சிறிது இடைவெளி விட்டும் இருக்கலாம்.
ஒற்றை தலைவலிக்கு எளிய தீர்வு
உங்களுக்கு ஒற்றை தலைவலி (migraine treatment in tamil) பிரச்சனை இருந்தால், அந்த நோய் ஏற்படுவதன் காரணத்தை கண்டறிவதன் மூலம், ஒற்றை தலைவலி நோயை நாம் குணப்படுத்தலாம்.
ஒற்றை தலைவலியை மாத்திரையால் குணப்படுத்த முடியும், ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி மாத்திரையை பயன்படுத்தகூடாது.
தலைவலி ஏற்பட்டால் அமைதியான இடத்தில் ஓய்வெடுங்கள், சத்தம் இல்லாத அல்லது இருட்டான அறையில் முடிந்தளவு சிறிது நேரம் தூங்கவும்.
மைக்ரேன் தலைவலி பித்தத்தின் சார்புத் தன்மை இருப்பதால் கசப்பை ஆதாரமாகக் கொண்ட கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மஞ்சள், மரமஞ்சள், சீந்தில் கஷாயத்துடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் கொடுப்பது சிறந்தது.
இதற்குப் பத்யாஷடங்கம் என்று பெயர். இது ஆயுர்வேத மருத்துவ உலகில் மிகப் பிரசித்தம்.
ஒற்றை தலைவலி குணமாக மக்னீசியம் சத்துகள் அதிகமுள்ள கீரைகள், ஒமேகா 3, ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள மீன் உணவுகள், தானியங்கள் மற்றும் திணை, உணவில் அதிகம் இஞ்சி சேர்க்கவும், பால், காபி மற்றும் ஆளி விதைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒற்றை தலைவலி நீங்க எளிய வழிகள்
தண்ணீர் மருத்துவம் மிகவும் எளிதானது. இது உடலின் இரத்த ஓட்டத்தை திறம்பட சீராக வைக்கிறது. தலைக்கு வெளியே இரத்த ஓட்டத்தை சீராக இயக்குவதின் மூலம் வலியை சற்று குணப்படுத்த உதவுகிறது.
குளிர்ந்த நீரில் கால்களை வைத்து, சூடான பாட்டில் நீரை தலைக்கு பின்புறம் வைப்பதின் மூலம், தலைவலியை கட்டுப்படுத்த முடியும்.
பத்து கிராம்பையும், ஒரு கடுக்காயின் தோலையும் நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில் குடிக்கலாம்.
நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறை, இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.
இஞ்சிச் சாறு, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
ஒற்றை தலைவலி குணமாக மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே தலைவலி நின்றுவிடும். இது கை கண்ட அனுபவ முறை.