இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனவரி முதல் ஓகஸ்ட் 2025 வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 5.116 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட (US$ 4.28 பில்லியன்) 19.3% அதிகமாகும்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.03 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 1.88 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருவாயுடன் ஒப்பிடும்போது 7.8% அதிகமாகும்.