ஓட்டோவில் திருத்தினால் கட்டணம்

0
163

முச்சக்கர வண்டிகளில் மேலதிக உபகரணங்கள் மற்றும் அலங்காரங்களை நிறுவுவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், அவ்வாறு மாற்றப்படும் உபகரணங்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

அதற்கேற்ப, முப்பது வகைகளின் கீழ், மூன்று சக்கர வாகனங்களை மாற்றியமைப்பதற்கான அறவீடாக அதிகபட்ச கட்டணமாக ரூ. 2,500 மற்றும் குறைந்தபட்சம் ரூ. 500 அறவிடப்படுவதுடன் அவற்றில் சில கட்டணம் செலுத்த தேவையற்றளதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்த மேலதிக தகவல்களை இணையத்தளத்தில் அல்லது 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

https://dmt.gov.lk/index.php?lang=en என்ற போக்குவரத்துத் திணைக்களத்தின் வலைத்தளத்தினூடாக மேலதிக தகவல்களை அறிய முடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here