ஓய்வு எப்போது -டோனி வெளியிட்ட அறிவிப்பு

0
152

தனது ஓய்வு மடிவு குறித்து சென்னை அணியின் தலைவர் எம்.எஸ் டோனி சூசகமாக தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற குஜராத் அணியுடனான போட்டியின் பின்னர் தோனி பேட்டிகொடுத்தார். அதில், ”ஐபிஎலில் முதலில் 8 அணிகள் பங்கேற்றன. தற்போது 10 அணிகள் வரை விளையாடி வருகின்றன. 2 மாத கடின உழைப்பால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளோம்.

குஜராத் அணி வலிமைமிக்க அணி. நாணயச்சுழற்சியை இழந்தது வெற்றிக்கு முக்கிய காரணம். ஜடேஜாவுக்கு இன்று துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. இருப்பினும், அவரது பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு உதவியது.

பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்தினாலே போதும் எனக் கூறியிருந்தேன். அதேபோல் சிறப்பாக செயல்பட்டனர்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ”களத்தடுப்பாளர்கள் எப்போதும் என்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என உறுதியாக கூறியிருந்தேன். பிடிகளை தவறவிட்டாலும் கூட பறவாயில்லை. என்னை பார்த்துக்கொண்டு, எனது சொல்லை கேட்டாலே போதும் எனக் கூறியிருந்தேன். அதேபோல் சிறப்பாக செயல்பட்டனர். களத்தடுப்பும் திருப்திகரமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

ஓய்வு அறிவிப்பு எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த டோனி, ”அடுத்த வருடம் விளையாடுவேனா, இல்லையா என்பதை உறுதியாக கூற முடியாது. அதுகுறித்து முடிவெடுக்க இன்னமும் 8-9 மாதங்கள் இருக்கிறது. நான் விளையாடாவிட்டாலும், சிஎஸ்கேவில்தான் இருப்பேன். வீரராக இல்லை என்றால், பயிற்சியாளர் குழுவில் இருப்பேன்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here