ஓர் இரு வாரங்களில் ஆயிரம் ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எஸ்.அருள்சாமி தெரிவிப்பு

0
175

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி முன்னாள் அமைச்சியினால் கடடி அமைக்கப்பட்ட தனி வீடுகள் தரமற்ற வீடுகள் என்பதால் அவ்வீடுகளை பரிசீலனை செய்வதற்கு அரசாங்க பொறியியலாளர்களை அனுப்பவுள்ளதாக மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் புதிய தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.அதேவேளையில் இவ்வாறு அனுப்பப்படும் பொறியியலாளர்களில் அறிக்கைகளை பெற்று அதனை ஓர் இரு வாரத்திற்குள் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அட்டன் செனன் தோட்டத்தில் கே.எம் பிரிவில் 45 தனி வீடுகளை கட்டி அமைக்க 22.11.2018 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட பகுதிகளில் தனி வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி முன்னாள் அமைச்சியினால் கட்டி அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அரசாங்கம் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாகவும், தொழிலாளர்களின் உழைப்பின் ஊடாக நான்கு இலட்சம் ரூபாவும் செலவிடப்பட்டு வந்துள்ளது.

அதேநேரத்தில் தற்பொழுது கட்டி அமைக்கப்பட்டுள்ள தனி வீடுகளை மனித வள அபிவிருத்தி நிதியனத்தின் புதிய தலைவர் என்ற ரீதியில் ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது அவ்வீடுக்ள குறித்த பத்து இலட்சம் ரூபாவை பயன்படுத்தாமல் அதற்கு குறைந்த தொகையை செலவு செய்து அமைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவ்வீடுகளை பரிசோதனை செய்வதற்கென அரசாங்க பொறியியலாளர்களை தோட்ட பகுதிக்கு அனுப்பி வைத்து அவர்களின் ஊடாக அறிக்கையை பெற்ற பின் சிலர் ஊழல் மோசடி எப்.சீ.ஐ.டீ க்கு செல்லவுள்ளார்கள். அவர்களை உள்ளே அனுப்பும் பொழுது நீங்கள் பொறுத்து இருந்து பார்க்கலாம் என தெரிவித்த அவர்.

இந்திய அரசாங்கத்தின் நிதியின் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கப்படும் தனிவீட்டு கிராமங்களை நகரமயமாக்குவதற்கு இ.தொ.கா மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இதன் ஊடாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஆகியன நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறு நகரமயமாக்கப்படும் திட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தோட்டங்களை உள்ளடக்கி ஒரே இடத்தில் 100 அல்லது 200 ஏக்கர் காணிகளை ஒரே இடத்தில் 1000 வீடுகளுக்கு அமைப்பதற்கான திட்டமும் வகுத்து வரப்படுகின்றது.

இத்திட்டத்தின் ஊடாக அதே இடத்தில் வைத்தியசாலை, வங்கிகள், நவீன பிள்ளை மடுவங்கள், பாடசாலைகள், தன்னியக்க பணமாற்று நிலையங்கள், நீச்சல் தடாகம் என்பவை உடன் சிறிய நகரம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

அந்த நகரத்தில் அமைக்கப்படும் கடை தொகுதிகளை அத்தோட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு வழங்கி வியாபார ஊக்குவிப்பும் முன்னெடுக்கப்படவுள்ளது.

23.11.2018 அன்று பாராளுமன்றம் கூடுகின்றது. இதில் தற்போது உள்ள புதிய அரசாங்கம் விழுந்து விடுமா என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் உள்ள புதிய அமைச்சரவையே அடுத்து வரும் தேர்தல் வரை நிலைத்திருக்கும் என நம்பிக்கை தெரிவித்ததோடு, அதேநேரத்தில் இந்த நாட்டில் அடுத்து ஒரு தேர்தல் முடிவு வெளிவரும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகவும் இருப்பார்கள். இதை யாராலும் மாற்ற முடியாது.

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்து விட்டது. எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

எதே ஒரு வகையில் தொழிலாளர்களுக்காக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கிடைக்க போகின்றது என்பது உறுதியாக தெரிவிப்பதாக அவர் கூறினார். அதே நேரத்தில் சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு கட்டிக் கொடுகின்ற வீடையும் வாங்கி கொண்டு எதிர்காலத்தில் யானைக்கு வாக்களித்தால் பூனையாக இருக்கின்ற நிலை வரும்.

மாறாக ஆறுமுகன் தொண்டமான் எச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கின்றார்றோ அச்சினத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் காலம் ஒன்றில் தலவாக்கலை நகரில் ஆயிரம் ரூபாவை பெற்றுத்தருவதாக வாய் திறந்த முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க இம்முறை அதே ஆயிரம் ரூபாய்க்கு போராடும் நிலையில் வாயே திறக்காமல் இருக்கின்றார்கள்.

ஆனால் நாட்டில் அரசியல் ரீதியாக ஏகப்பட்ட பிரச்சினை இருக்கின்ற போதிலும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் கோரிக்கை நியாயமானது என வாய் திறந்துள்ளார். பிரதமரை வாய் திறக்கும் சக்தி ஆறுமுகன் தொண்டமானை தவிர வேறு யாருக்கும் இல்லை என இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here