கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தஞ்சாவூரில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டிலும், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தாண்டு குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களிலும் கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்ற முயற்சிப்போம் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது என்பதை அறிவிக்கவே இந்த முயற்சி எனவும், அவர் இதன் போது குறிப்பிட்டார்.