கஞ்சா கடத்த முயன்ற இலங்கையர்கள், இந்தியாவில் கைது

0
4

படகு மூலம் கஞ்சா கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்களை, இந்தியாவின் காரைக்காலில் வைத்தது விசேட கடந்த வியாழக்கிழமை விசேடகாவல் குழு,கைது செய்தது.

அவர்களிடம் இருந்து ஒரு ஃபைபர் படகு, 50,000 இந்திய மதிப்பிலான பணம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையைச் சேர்ந்த இருவரும் பேர் உள்ளூரில் இருப்பவர்களிடம் கஞ்சா பெற்று கொள்ள கடல் வழியாக வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குழு கடலோர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியது.

சந்தேக நபர்கள் கருக்களச்சேரி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவர்களான 28, 24, வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக 50,000 இந்திய ரூபாவுடன் வந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here